இரத்தம் எடுத்த தாதிக்கு சிறைத்தண்டனை!

சனி பெப்ரவரி 09, 2019

மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்துவந்த தாதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

டென்மார்க்கை சேர்ந்த பெண் தாதி, பயிற்சி பெறுவதற்காக தனது மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்து வந்தமைக்காக குறித்த பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

டென்மார்க்கை சேர்ந்த 36 வயது பெண் தாதி தான் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லீற்றர் இரத்தம் எடுத்துள்ளார்.

குறித்த  சிறுவன் 11 மாத குழந்தையாக இருந்ததில் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தமையால் அவரது மகன் குடல் நோயினால் அவதிப்பட்டு வருகிறான். 

இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது ஹெர்னிங் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த பெண்ணுக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நிலையில் தாதியாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மகனின் உடலில் இருந்து எடுத்த இரத்தத்தை கழிவறையில் கொட்டி விட்டதாகவும், ஊசியை குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் விசாணையின்போது தாதி தெரிவித்தார்.