இரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை !

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் இருவருக்கு நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியதாக  காவல் துறை  ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினராலும், சுங்கத் திணைக்களத்தினராலும் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இருவரும் குற்றத்தை ஒத்துக் கொண்டதன் பின்னர் நீதவான் இந்த தண்டனையை வழங்கினார்.

இந்த இரு இந்தியர்களில் தனிவேல் மணி என்பவர் 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 28 ஆம் திகதி 212 கிராம் ஹெரோயினுடனும்,  மற்றைய நபர் லெப்பை ஜலாவூதீன் மொஹீபீன் மொஹடீன் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி 838 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.