ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது!

சனி பெப்ரவரி 23, 2019

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி 40 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு ஐநா நோக்கி செல்லும் ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக இன்றைய தினம் யேர்மனியில் சார்புருக்கன் நகரபிதாவுடன் சந்தித்து உரையாடியதோடு மனுவும் கையளித்தனர்.

111

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஈருருளிப்பயணம் பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்ஸ் நாட்டை வந்தடைந்து சார்க்குமுன் மாநகர முதல்வரையும் பிரான்ஸ் ஊடகங்களையும் சந்தித்து தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது.

111

தமிழின அழிப்பிற்கு பரிகார நீதிகோரும் முகமாக ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் எதிர்வரும் 04.03.2019 அன்று ஐநா நோக்கி ஈகைப்பேரொளிகளின் திடலுக்கு அணிதிரளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.