இறுதி நபர் சாட்சியம் வரை தெரிவுக்குழு நடவடிக்கை தொடரும்

புதன் ஜூன் 12, 2019

ரிஷாத் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் காணப்படுகின்றமையினால் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது எனவும் குற்றம்சாட்டப்பட்ட இறுதி நபர் சாட்சியமிளக்கும் வரையில் பாராளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கையை தொடர்வதற்கும் தீர்மானமிக்கப்பட்டுள்ளது. 

தெரிவுக்குழுவின் பதில் தவிசாளர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தலைமையிலான தெரிவுக்கு குழு உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.  

இந்த சந்திப்பின்போது தெரிவுக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்புகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்புப்பட்ட விடயங்கள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் விசாரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.