இறுதிநிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது படையினர் துப்பாக்கி பிரயோகம்

திங்கள் மார்ச் 29, 2021

சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் இறுதிநிகழ்வுகளை இலக்குவைத்து மியன்மார் படையினர் துப்பாக்கி பிரயோகத்தில்ஈடுபட்டனர் என தகவல்கள்வெளியாகியுள்ளன.

தலைநகர் யங்கூனிற்கு அருகில் உள்ள பாகோவில் 20வயது மாணவனின் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் இறந்த இளைஞனிற்காக புரட்சி பாடலை பாடிக்கொண்டிருந்தவேளை படையினர் அங்கு வந்து துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார் நாங்கள்அங்கிருந்து தப்பியோடினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.