இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை!

திங்கள் மே 25, 2020

 “ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளான ரமலான் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் நமது இஸ்லாமியர்களால் கொண்டாடும் உலக உன்னத பெருநாள் விழா.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மசூதிகள் மூடப்பட்டு தொழுகை நடைபெற இயலவில்லை என்றாலும், சமூக இடைவெளி பேணும் இக்காலத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் குரானுடனும் அல்லாவுடனும் கூடுதலாக இணைந்து இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்ணல் நபிகள் நாயகம் சொன்ன முதன்மையான நெறிமுறைகளும் அதுதான். பிரதிபலிப்பு, வழிபாடு, கடவுளுடனான இணைப்புக்கான நாட்கள் இவை.

அதுதான் இந்த ரமலான் நோன்பு நாட்கள்.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாளன ”ரம்ஜான் பண்டிகை” பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாத்தில் பின்பற்றப்பட வேண்டிய முதன்மையான கொள்கைகள். அப்படி இருக்கும்பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது..

அன்பும், ஈகைக் குணமும், பிறர்மீதான கருணையும் கொண்டு மனிதநேயம் வளர்க்கும் மார்க்கமான இஸ்லாம் மதத்தின் நெறிமுறைகள். அதை அனைவர்க்கும் கற்றுதரும் எங்கள் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் சார்ந்திருக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் ரமலான் பெருநாள் விழா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

வாழ்த்துகளுடன்
எஸ். கருணாஸ் எம்.எல்.ஏ.,
திருவாடானை சட்டமன்றத் தொகுதி