இஸ்ரேலில் சீன தூதுவர் சடலமாக மீட்பு!

ஞாயிறு மே 17, 2020

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் டூ வெய் இன்று (17) காலை இஸ்ரேலில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது படுக்கையறையில் கட்டிலில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

58 வயதுடைய தூதுவர் டூவின் மரணம் குறித்து இஸ்ரேல் காவல் துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.