இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு ஆரம்பம் - நேரலை

புதன் ஜூலை 20, 2022

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

 இரகசிய வாக்கு சீட்டுக்களை பிரிதொரு நபருக்கு காண்பிக்கக் கூடாது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

 நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரது பெயருக்கு அருகிலுள்ள கூட்டில் ''1' ; என இலக்கத்தை குறிப்பிட வேண்டும். அவ்வாறில்லை எனில் அந்த வாக்கு செல்லுடியற்றதாக கருதப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இடைக்கால ஜனாதிபதி தெரிவிக்கான வாக்களிப்பு ஆரம்பமாகிய நிலையில் முதலாவது வாக்கினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிவு செய்தார்.