இத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா

புதன் ஜூன் 26, 2019

இத்தாலி மேற்பிராந்திய மாந்தொவா நகரில் இயங்கி வரும் திலீபன் தமிழ்ச்சோலையில் 23.06.19 அன்று முத்தமிழ் விழா இடம்பெற்றது.

i

காலை 11.30 மணியளவில்  இந்நிகழ்வு பொதுச்சுடர், தமிழீழ தேசியக் கொடி ஏற்றல், அகவணக்கம், ஈகைச்சுடர் ஏற்றல் ஆகிய ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் மங்களவிளக்கேற்றி வைக்க ஆரம்பமானது.

i

தொடர்ந்து தமிழ் மொழி, பண்பாடு, தேசியம் சார்ந்து நடனங்கள் பாடல்கள் தேசிய தலைவர் சிந்தனைகள் அறிவுத்திறன் போட்டி என கலை நிகழ்வுகளை மாந்தொவா மற்றும் பொலோனியா, ரெச்சியோ எமிலியா, ஜெனோவா தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கினர்.

ia

i

i

i

i

மாலைவரை தொடர்ந்த இந்நிகழ்ச்சியில் 200க்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கும்இ ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நன்றியுரையைத் தொடர்ந்து தேசியக்கொடி இறக்கப்பட நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. இந்நிகழ்வு திலீபன் தமிழ்ச்சோலை  மாணவர்களாலேயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

i