இத்தாலியில் 11இலங்கையர்களுக்கு அந்த நாடு 33 ஆயிரம் யூரோ அபராதம்

வெள்ளி ஏப்ரல் 24, 2020

இத்தாலியில் தமது குடியிருப்பில் விருந்தொன்றை அமர்க்களமாக நடத்திய 11 இலங்கையர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இத்தாலிய அரச தொலைக்காட்சியான ஐ.பி. என் தகவலின்படி
இலங்கையர்கள் விருந்தை நடத்துவது தொடர்பில் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த 11 இலங்கையரை கைது செய்யததுடன் 33 ஆயிரம் யூரோ அபராதமும் விதித்தனர்.

இத்தாலியின் உள்ளூர் ஊடகங்கள் கொரோனாவால் ஆயிரக்கண்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் இத்தாலி மற்றும் அதன் குடி மக்களுக்கு அவமரியாதை என்று தெரிவித்துள்ளன.