ஜெனிவா முன்றலில் தமிழர் உரிமைப் பேரணியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

ஞாயிறு பெப்ரவரி 21, 2021

இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு சுகாதார விதிகளை கடைப்பிடித்து ஜெனிவா முன்றலில் தமிழர் உரிமைப் பேரணி நடைபெறவுள்ளது. அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் 27/02/2021 (சனிக்கிழமை ) அன்று  முற்பகல் 11.00 மணியளவில்  பின்லாந்தில் வாகனப்பேரணியொன்று நடைபெறவுள்ளது.  

அறுபது ஆண்டுகளிற்கும் மேலாக, சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசுகளினால், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ,  தமிழர்கள் மீதான இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக 2009 இல் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் தமிழின அழிப்பு சிறிலங்காவின் இராணுவத்தினால் நடாத்தப்பட்டது. இதற்கான அனைத்துலக நீதியை கோரி ,  மனிதவுரிமைப் பேரவையை  (ஜெனிவா) நோக்கி ஆண்டுதோறும் கவனயீர்ப்பு பேரணி நடாத்தப்பட்டு வருகின்றது.

வாகனப் பேரணிக்கான  வழித்தடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.அனைவரையும் இந்த தமிழர் உரிமைப்பேரணியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.     

-தமிழர் ஒருங்கிணைப்பு குழு-பின்லாந்து ,             

 -தமிழ் இளையோர் அமைப்பு-பின்லாந்து       

-பின்லாந்து தமிழர் பேரவை