ஜேர்மன் அம்மா உணவகத்தின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!

வெள்ளி பெப்ரவரி 08, 2019

யேர்மனியில் உள்ள அம்மா உணவகத்தின் அனுசரணையுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டு த்துறையினால் புளியங்குளம் வடக்கு பரிசன்குளத்திலுள்ள இந்தியன் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்று வருகின்றது.

அறிவொளி கல்வி நிலைய மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் ஜேர்மன் அம்மா உணவகத்தின் நிதிஉதவியுடன் நேற்று மாலை 07.02.2019 வழங்கிவைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டதுடன் வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினர் திரு.திருநாவுக்கரசு விஜீகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கிவைத்தார்.