ஜே.வி.பி.யின் மக்கள் சந்திப்பு!

வெள்ளி மார்ச் 15, 2019

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வேண்டாம் என்ற தொனிப்பொருளினை முன்னிலைப்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று கொழும்பில் மக்கள் சந்திப்பொன்றினை முன்னெடுத்திருந்தனர். 

தமிழ் மற்றும்  முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் அரசியல் உரிமை  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி  முறைமையினால் பாதுகாக்கப்படவில்லை.   

சிவில் பயங்கரவாத யுத்தம்  தோற்றம் பெற்றமையும், அதன் தொடர்ச்சி 30வருடகாலம்  நீண்டு சென்றமையும் நிறைவேற்று அதிகாரத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் ஆகும். 

எனவே பொருளாதாரத்தின் பின்னடைவு ஏற்படுவதற்கு பிரதான காரணம்  ஒரு தனிமனிதனிடம் வரையறையற்ற அரசியல் அதிகாரங்கள் குவிந்து காணப்படுகின்றமையாகும் என இந்த சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.