ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் நாட்டு மக்களுக்காக உரையாற்ற உள்ளார்!!

புதன் ஏப்ரல் 08, 2020

பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,328 ஆக உள்ளது. உள்ளிருப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்து மூன்று வாரங்கள் கடந்து நான்காவது வாரத்தில் உள்ளோம்.

இந்த நடவடிக்கை மேலும் நீட்டிக்கப்படுவதுடன், முன்பை விட மேலும் இறுக்கமாக்கப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாளை (வியழக்கிழமை) இரவு மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றுகின்றார்.
 
இரவு 8 மணிக்கு இவர் நாட்டு மக்களுக்காக உரையாற்ற உள்ளார். கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்ததில் இருந்து மக்ரோன் மேற்கொள்ளும் மூன்றாவது உரை இதுவாகும்.