ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய முடியாத தகைமையீனங்கள் குறித்து அவதானம்

சனி ஜூலை 16, 2022

 பதவி வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு வேட்பு மனுக்கலை தாக்கல் செய்யும் போது உறுப்பினர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய முடியாத தகைமையீனங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என  நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க சபையில் வலியுறுத்தினார். 

 விசேட  நாடாளுமன்ற அமர்வு சனிக்கிழமை (16) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. 

 ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியலமைப்பின் 38(1) அ உறுப்புரையின் பிரகாரம் 2022 ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி பதவி பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

 பதவி விலகல் தொடர்பில் மூன்று அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு தெரிவிப்பார் என சபாநாயபர் மஹிந்த யாப்பா சபைக்கு அறிவித்தார். 

 ஜனாதிபதி பதவி விலகல் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் மூன்று அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாhயகம் தம்மிக்க தஸநாயக்க சபைக்கு வருமாறு அறிவித்தார்.

  நாடாளுமன்ற அமர்விற்கான விசேட வர்த்தமானி 

 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு தொடர்பிலான விசேட ஏற்பாடுகளுக்கமைய 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்க்கபடாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் போது அந்த பதவி வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட வேண்டும் என்பதால் பாராளுமன்றத்தை கூட்டும் வகையில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (விசேட ஏற்பாடுகள்) 4ஆம் அத்தியாத்திற்கமைய வெளிப்படுத்தப்படும் அறிவித்தல் பாராளுமன்றம் கலைக்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் பதவி வெற்றிடமாகி மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதற்கமைய இன்று ( 2022.07.16) பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

 ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் 

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஜுலை மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதுடன்,1981 ஆம் 02ஆவது இலக்க ஜனாதிபதி தெரிவு (விசேட ஏற்பாடுகள்) 05ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் சபைக்கு இவ்வாறு அறிவிக்கப்படுகிறது. 

 அதற்கமைய அரசியலமைப்பின் 38(1) அ பிரகாரம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகல் தொடர்பில் சபாநாயகருக்கு 2022.07.14ஆம் திகதி அனுப்பி வைத்த உத்தியோகப்பூர்வ கடிதத்ததை சபைக்கு சமர்பிக்கிறேன் .


 மதிப்பிற்புகுரிய சபாநாயகர் அவர்களே...நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அரசியலமைப்பின் பிரகாரம் பதவி பிரமாணம் செய்து 2019.11.18ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றேன்.

 பதவியை பொறுப்பேற்று மூன்று மாதகாலங்களுக்குள் முழு உலகத்திற்கும் தாக்கத்திற்கும் தாக்கம் செலுத்திய கொவிட் பெருந்தொற்று தாக்குதல் இலங்கைக்கும் தாக்கம் செலுத்தியது.

 அதுவரையான காலப்பகுதியிலான பொருளாதார நெருக்கடி,கொவிட் தாக்கம் ஆகியவற்றிற்கு மத்தியில் நாட்டு மக்களை பாதுகாக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக 2020 மற்றும் 2021 ஆகிய காலப்பகுதிகளில் நாடு பலமுறை முடக்கப்பட்டதால் பல ஆண்டுகாலமாக தாக்கம் செலுத்திய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடை;ந்ததால் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு நேரிட்டது. 

 இந்த நிலையற்ற தன்மைக்கு தீர்வு காணும் நோக்கில்  நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முழுமையான முயற்சியை முன்னெடுத்தேன். பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறந்த தீர்மானங்களை முன்னெடுத்தேன் என்பதை தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். 

 பொது மக்களின் கோரிக்கைக்கமையவும், 2022.07.09ஆம் திகதி  நாடாளுமன்ற அரசியல் கட்சி தலைவர்களின் வலியுறுத்தலுக்கமைய தாங்கள் அனுப்பிய கடித்தில் குறிப்பிட்டதற்கமைய அரசியலமைப்பின் 38 (1)அ உறுப்புரையின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின்ஜனாதிபதி பதவியை 2022.07 .14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்கிறேன் .என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 அத்துடன் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதுவரையான காலப்பகுதியில் தாய்நாட்டிற்கு என்னால் முடிந்த அளவிற்கு சேவையாற்றிள்ளேன்.தொடர்ந்து நாட்டுக்காக இயலுமான சேவையாற்ற எதிர்பார்த்துள்ளேன் என்பதை மேலும் தெரிவித்துக்கொள்கிறேன். 

 வேட்பு மனுத்தாக்கல்- ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு 

 1981 ஆம் ஆண்டு ; 2ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு ( விசேட ஏற்பாடுகள்) 5ஆம் உறுப்புரையின் பிரகாரம் இன்று (நேற்று) கூடிய தினத்திலிருந்து 48 மணித்தியாலத்திற்குள் அல்லது 7 நாட்களுக்கு பிந்தாமலும் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளும் நேரம்,திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதாவது 2022.07.19ஆம் திகதி  நாடாளுமன்றம் கூடிய வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.ஜனாதிபதி தெரிவு (விசேட ஏற்பாடுகள்) 6ஆவது உறுப்புரையின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

  நாடாளுமன்றத்தின் ஊடான ஜனாதிபதி தெரிவு பணியில்  நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படுவார்.வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் என்பதற்கான வேட்பு மனுவை குறித்த நபர் எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க வேண்டும்.

 வேட்பு மனு தாக்கல் செய்யும் தினத்தன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ள உறுப்பினர் கட்டாயம் அன்றைய தினம் சபைக்கு சமுகமளிக்க வேண்டும்.அத்துடன் அந்த வேட்பு மனுவை பிறிதொரு உறுப்பினர் உறுதிப்படுத்த வேண்டும்.அது தொடர்பில் விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமாட்டாது.

 ஒரு உறுப்பினரது பெயர் மாத்திரம் பரிந்துரைக்கப்படுமாயின் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு குறித்த உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது சபைக்கு அறிவிக்கப்படும்.அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோரது பெயர் குறிப்பிடப்பட்டு அது உறுதிப்படுத்தப்படுமாயின் வேட்பு மனுத்தாக்கல் சமர்ப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி தெரிவிக்கான வாக்கெடுப்பு இடம்பெற வேண்டும்.

 அதற்கமைய தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை அதாவது 2022.07.20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பினை நடத்த குறித்தொதுக்கப்பட்டுள்ளது.

 பதவி வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான; வேட்பு மனுக்கவை தாக்கல் செய்யும் போது அரசியலமைப்பின் 92ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய முடியாதவர்களின் தகைமையீனம் தொடர்பில் சகலரும் அவதானத்திற்கு கொள்ள வேண்டும் என்றார்.