ஜனாதிபதி வேட்பாளர் யார்?

வியாழன் ஓகஸ்ட் 22, 2019

இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிப்பதாக  ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார். 

ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உடனடியாக நிறைவு செய்து கையளிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவுருத்தல் வழங்கியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு  முன்னர் குறைந்தப்பட்சம் கூட்டணிக்கான யாப்பு தனக்கு கிடைக்கப்பெற வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து கலந்துரையாடுகயிலேயே  பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இதனை தெரிவித்துள்ளார்.