ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ரணில் சாட்சி

திங்கள் செப்டம்பர் 21, 2020

முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கடந்த செப்டெம்பர் 19 இல் நடைபெற்ற விசாரணையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு சாட்சியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் முன்னதாக எதிர்வாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிவான் உபாலி அபயரட்னவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பல முறைப்பாடுகள் தொடர்பில் அவர் ஆணைக்குழுவுக்கு இந்தத் தீர்மானத்தை அறிவித்தமைக்கு இணங்க இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபன தற்போதைய தலைவர் கலாநிதி நிஹால் ஜயதிலக ஆகியோரால் முன்னாள் பிரதமர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்தும் முன்னதாக பரிசீலிக்கப்பட்டது.

கலாநிதி ஜயதிலக மற்றும் திவிநெகும முன்னாள் பொது இயக்குநர் கித்சிறி ரணவக்க ஆகியோரால் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டலி சம்பிக்க ரணவக்க  நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திசாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மேற்குறித்த அதே தினத்தில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.