ஜனாதிபதித் தேர்தல் ஒன்றே தீர்வு!

வியாழன் ஜூன் 13, 2019

நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றே தீர்வெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து  சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் தப்பிக்க முடியாதெனவும் எச்சரித்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில், நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.