ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்க சிறீலங்கா முயற்சி!

புதன் பெப்ரவரி 05, 2020

இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் நிலைப்பாட்டை, உண்மைகளைத் திரட்டி வெளியிடுவதனைத் தடுப்பதன் ஊடாக ஊடகச் சுதந்திரம் முற்றிலும் அற்றுப் போய்யுள்ளது. அத்துடன், ஊடகங்களும், ஊடகவிலாளர்களும் கொலை அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் உள்ளாகின்றனர். குறிப்பாக தமிழர் தாயகப்பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கைது, காணாமல் போதல், கொலைச் செய்யப்படல் போன்றவை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த காலங்களில் குறிப்பாக தற்போதுள்ள ஆட்சி அரசாங்கத்தில் பல ஊடகவியலாளர்கள் கொலைச் செய்யப்பட்டும் உள்ளனர். மீண்டும் சிறீலங்காவில் இடம்பெறம் அரசாங்கத்தின் போலிப்பிரச்சாங்களையும், ஏமாற்று நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டுவரும் ஊடகவிலாளர்களுக்கு கொலைமிரட்டல் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக தமிழர் தாயகப்பகுதியில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மக்களினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்புக்களை வெளியுலகுக்கு கொண்டுவரும் ஊடகவிலாளர்களை முடக்கும் பல முயற்சிகளை சிறீலங்கா அரசாங்கம் கையாண்டுவருகிறது.

‘இலங்கை சனநாயக் சோசலிச குடியரசு நாடு’ என்று சிங்கள ஆட்சியாளர்களினால் கூறப்படுகின்றபோதிலும் எவ்விதத்திலும் சனநாயக விதிமுறைகளோ, சமதர்மக் கோட்பாடுகளோ எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்பது கடந்த எழுபது ஆண்டு காலத்திற்கு மேலாக காணக்கூடியதாக உள்ளது.

அப்பாவித் தமிழ் மக்கள் வாய் பேசா ஊமைகளாக, மெளனிகளாக வாழத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள சிறீலங்கா அரசு, தனது அரச படை இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மக்களின் குரலை வெளிக்கொண்டுவரமுடியாதவாறு கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு பேச்சுச் சுதந்திரம் இருக்கு எனக் கூறும் அரசாங்கத்தினால் அவர்கள் எதிர் நோக்கும் உண்மையானப் பிரச்சினைகளை, வாழ்வியல் நிலைப்பாட்டு உண்மைகளை வெளிக்கொணருவதற்கு ‘ஊடகமுடக்கம்’ தொடர்கின்ற இவ்வேளையில்,

சிறீலங்கா அரசுக்கு சார்பான, உண்மைகளை மறைக்கும் மறிதலிக்கும் ஊடகங்களுக்கும் ஊடகவிலாளர்க்கும் முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவ்வாறான பொய்பரப்புரைக்கு முன்னுரிமை கொடுக்கும் ஊடகங்களிற்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சுதந்திரத்தையும், அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி அரச, தனியார் ஊடகங்கள் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக அரசுடன் சார்பாக இயங்கும் அமைப்புகள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பிவருகின்றன.

அத்துடன் சில முன்னாள் போராளிகளின் கருத்துக்களையும் தம்மோடு உள்வாங்கி தமிழரது நலனுக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வருகின்றன. சிங்கள அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளை தொடர்பான உண்மைகளை எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா அமர்வுக்கு கொண்டுசெல்லவிடாதவாறு  மூடிமறைக்கும் செயற்பாட்டில் சிறீலங்கா அரசு முழுமூச்சாக செயற்பட்டுவருகிறது.

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் மோசமாக இருப்பதாக பல்வேறு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், போர் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்களும், பத்திரிக்கை அலுவலகங்களும் தாக்கப்பட்ட  சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இறுதிகட்டப் போரின் போது சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

இவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. அரசை விமர்சித்து எழுதும் பத்திரிக்கையாளர்களை ‘துரோகிகள்’ என்றும் கடந்த காலத்தில் சிறீலங்கா அமைச்சர்கள் விமர்சித்த பதிவுகளும் உள்ளன. இதனையும் விட நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களின் கை கால்களை முறிப்பேன் என்று எச்சரித்திருந்தார்கள், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, பல தமிழ் ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

எனினும், கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்கள் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஓர் ஊடகவிலாளர் என்றளவில் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் இந்தமாதமும் 9ம் திகதி சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவேந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

லசந்த எவ்வாறு யாரால் கொல்லப்பட்டார் என்பது குறித்து மக்கள் அறிவார்கள். அதனடிப்படையில் நினைவேந்தல் இடம்பெறும் பட்சத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தோண்டி எடுக்க ஊடகவிலாளர்கள் முற்படுவார்கள் என்ற சந்தேகத்தில் அதனை நினைவு கூர்ந்த ஊடகவிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

எனினும், அரசாங்கமும் அதன் கைக்கூலிகள் மூலம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிகையில் ஈடுபட்டு அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அரசாங்கம், தற்போது அச்சம்பவத்தை அவர்களுக்கு எதிராக திசைதிருப்ப முற்படுகிறது.

அதாவது, மாவட்டத்தில் தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சில ஊடகவிலாளர்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுடாக சம்பவத்தை திசைதிருப்பபடுகிறது. அரசாங்கத்தின் உண்மையை வெளிக்கொண்டுவரும் எவராக இருந்தாலும் அதனை அவர்களுக்கு எதிராக திசைதிருப்புகின்றனர்.

அண்மையில் கூட சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணின் செயற்பாடுகளையும் அவ்வாறு செய்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

அவ்வாறு லசந்தவின் நினைவு கூறும் நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்படுகின்றனர். வெளியுலகில் அரசாங்கத்தின் நற்பெயரை கெடுப்பதற்காக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அரச படையின் புலனாய்வுப் பிரிவினர் செயற்படுகின்றனர். உண்மைச் சம்பவங்கள் மூடிமறைக்கப்படுகிறது. ஊடகவிலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வெளியிட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக புலன் விசாரணைகள் எதுமின்றி, சில கைக்கூலிகளின் உதவியுடன் நினைவுத்தூவி கட்டுவதற்கான பணம் எங்கிருந்து வந்துள்ளமை தொடர்பான விசாரணையில் அப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், மாவட்டத்திலுள்ள இயங்கிவரும் ஊடக மையத்தில் அலுவலகத்தில் போடப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக மட்டக்களப்பு பிரதான காவல்துறை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், தனிப்பட்ட ரீதியாக மாவட்டத்தில் இயங்கிவரும் அரச படைகளின் புலனாய்வுப் பிரிவினர் கொலை மிரட்டலுக்குள்ளாக்கப்பட்ட  ஊடகவிலாளர்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி பல்வேறு தகவல்களை கோரிவருகின்றனர்.

அதனால் அந்த ஊடகவிலாளர்கள் மனஉளச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் படை மற்றம் கடந்த காலங்களில் இயங்கிய ஆயுதக் குழுக்கள் அரசியல் கட்சி என்ற போர்வையில் தமது செயற்பாடுகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் பின்புலத்தில் முன்னெடுத்துச் செல்கிறது. குறிப்பாக போர்க் குற்றம் தொடர்பாக வெளிவரும் செய்திகளை நேரடியாக வெளியிட கூடாதென்பதற்காக தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்களை தற்போதைய அரசாங்கம் அழைத்து அச்சுறுத்தும் பாணியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.

ஊடகவிலாளரின் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் வன்முறைகள் பக்கச்சார்பின்றி விசாரிக்கப்பட வேண்டும். ஊடகவிலாளர் பாதுகாப்பை பலப்படுத்துவதற்
காக உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாடுகளில் இயங்கும் ஊடகம் சார்ந்த சர்வதேச அமைப்புக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘கிழக்கில் இருந்து’
-எழுவான்-

நன்றி: ஈழமுரசு