ஜோதிகா படத்தில் இணையும் குரு சிஷ்யன்கள்!

சனி பெப்ரவரி 09, 2019

சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் குரு சிஷ்யன்களான பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் நடிக்கிறார்கள். 

காற்றின் மொழி படத்துக்கு பிறகு ஜோதிகா தற்போது ராஜ் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து வரும் அவருக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. 

இந்நிலையில் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையாக உருவாக உள்ள இந்த படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் மூவரும் நடிக்கிறார்கள். பாரதிராஜாவிடம் பாக்யராஜும், பாக்யராஜிடம் பார்த்திபனும் உதவி இயக்குனராக இருந்தவர்கள். முதன்முறையாக மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சூர்யாவே தயாரிக்க இருக்கிறார்.