ஜப்பான்–சிறீலங்கா இடையே உயர்மட்ட பேச்சு!!

புதன் ஜூன் 12, 2019

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் டோஷிகோ அபேக்கும் இடையில் அலரிமாளிகையில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதன்போது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்குதலுக்கான ஜப்பானின் உதவியை பிரதமர் வரவேற்றுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,இலங்கை மற்றும் ஜப்பானின் கடலோர காவற்படைக்கு இடையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வழிகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்தோடு இந்த சந்திப்பில் இந்திய பசிபிக் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.