கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு மீட்பு

திங்கள் ஜூலை 06, 2020

மருதனார்மடம், கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையாக நேற்று (05) மாலை இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

”குண்டினை செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று பெறப்படும்.  பின்னர்  வெடிகுண்டு அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்படும்” என்றும் சுன்னாகம் காவல் துறையினர் கூறினர்.