கையெ­ழுத்­திட்­டமை தொடர்­பில் விளக்­கம்­கேட்டு சில­ருக்கு மாத்­தி­ரம்,வட்ஸ்­அப் மற்­றும் வைபர் ஊடாக கடி­தம்!!

வெள்ளி செப்டம்பர் 17, 2021

ஜெனி­வா­வுக்கு,இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எழு­திய கடி­தத்­துக்கு மாற்­றுக் கடி­தம் எழு­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட 9 பேரி­ட­மும்,தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச்­ செ­ய­லா­ளர்
ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

தமிழ் அர­சுக் கட்சி ஜெனி­வா­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தில்,தமி­ழீழ
விடு­த­லைப் புலி­கள் மீது விசா­ரணை நடத்­த­ வேண்­டும் என்ற விட­யம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்த விடயத்தில் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக் கட்சியின் ஒரு அணியினர், அதற்குப் புறம்பாக வேறு ஒரு கடிதத்தை ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றனர்.

அதன்படி தயாரிக்கப்பட்ட கடிதத்தில்,நாடா­ளு­மன்ற
உறுப்­பி­னர்­களான..

சி.சிறி­த­ரன்,சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன்,கலை­ய­ர­சன்,

முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன்,அரி­ய­நேந்­தி­ரன்,சிறி­நே­சன்,யோகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் கிழக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் நட­ராஜா,

மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை முன்­னாள் முதல்­வர் சர­வ­ண­ப­வன் ஆகிய 9 பேரும் அதில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­னர்.

அந்­தக் கடி­தத்தை ஐ.நாவுக்கு அனுப்ப நட­வ­டிக்கைஎடுத்­தி­ருந்­த ­
நி­லை­யில்,நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் பின்­வாங்­கி­ய­மை­யால் அந்­தக் கடி­தம் அனுப்­பப்­ப­ட­வில்லை.

இந்­த­நி­லை­யில்,குறித்த கடி­தம் தயா­ரித்­தமை மற்­றும்
கையெ­ழுத்­திட்­டமை தொடர்­பில் விளக்­கம்­கேட்டு சில­ருக்கு
மாத்­தி­ரம்,வட்ஸ்­அப் மற்­றும் வைபர் ஊடாக கடி­தம்
அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச் செய­லா­ளர் சத்­தி­ய­லிங்­கத்­தி­டம் நேற்­றி­ரவு கேட்­ட­போது,குறித்த கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்ட 9 பேரி­ட­மும் விளக்­கம் கேட்டு சமூக வலைத்­த­ளம் ஊடாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடி­தம் அனுப்­பி­யுள்­ளேன்.

அவர்­கள் 9 பேரும் கடி­தத்­தைப் பார்­வை­யிட்­டுள்­ள­னர்.அவர்­க­ளின்
பதி­லைக் கொண்டு மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.என்­றார்.