காளி பூஜையில் பங்கேற்ற வங்கதேச அணி முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல்!!

புதன் நவம்பர் 18, 2020

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசன் 33. சூதாட்டம் குறித்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு ஆண்டு தடை விதித்தது. சமீபத்தில் தான் இதில் இருந்து மீண்டார்.

இவர் கோல்கட்டாவில் நடந்த காளி பூஜையில் பங்கேற்றார். இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசத்தை சேர்ந்த மத அடிப்படைவாதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தனது செயலுக்காக சாகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் கூறுகையில்,''நான் சிறப்பு அழைப்பாளராக செல்லவில்லை. ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்,'' என்றார். மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.