காலியில் ஒருவருக்கு கொரோனா

சனி அக்டோபர் 17, 2020

 காலியின் எல்லைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபரே இவ்வாறு கொரோனா தொற்றாளராக பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது, குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.