காணாமல் போன பெண் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன

சனி நவம்பர் 21, 2020

 தொற்று நோய் மருத்துவமனையில்(ஐடிஎச்) இருந்து தனது 2 1/2 வயது மகனுடன் தப்பிச் சென்ற பெண் தொடர்பாக காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை  மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

குறித்த பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக எஹெலியகொட மற்றும் கிரி எல்ல  காவல் துறை நிலையங்களின் அதிகாரிகள் அப்பகுதி குடியிருப்பாளர்களுடன் கூட்டிணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பெண் ஜூலை 22இல் எஹெலியகொட காவல் துறையால் கைது செய்யப்பட்டு குருவிட்ட சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் கொவிட்-19 தொற்றுக்காக ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதேவேளை எஹெலியகொடவிலுள்ள ஒரு வீட்டில் விடப்பட்ட குழந்தையை  காவல் துறை நேற்று கண்டுபிடித்திருந்தனர்.