காங்கோவில் இறைச்சிக்காக கொல்லப்படும் மலை கொரில்லாக்கள்!

திங்கள் சனவரி 11, 2021

காங்கோ மிக பெரிய இயற்கை வளம் மிகுந்த நாடு, அங்கு தான் உலக நாடுகளில் எங்கும் காணப்படாத ஒரு அரிய வகை உயிரினமான மலை கொரில்லாக்கள் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

இந்த அரியவகை மலை கொரில்லாக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவை கொல்லப்படும் எண்ணிக்கையில் நீண்டு கொண்டே போகிறது.

சர்வதேச சந்தையில் இந்த அரிய வகை மலை கொரில்லாவுக்கு மதிப்பு அதிகமாக உள்ளதால், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள், பெரும்பாலான கொரில்லாக்களை கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் வாடிக்கையாக்கி உள்ளனர்.

சனநாயக குடியரசு நாடான காங்கோவில் "விருங்கா" என்ற தேசிய பூங்காவில் நேற்று ஆறு அறியவகை கொரில்லாக்கள் காங்கோவில் உள்ள ஆயுதமேந்திய வனப்பகுதியில் பதுங்கியுள்ள கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளது. 

இந்த தேசிய பூங்கா அறிய வகை மலை கொரில்லாக்களுக்காகேவே சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டதாகும். சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 200 மேற்பட்ட அறியவகை மலை கொரில்லாக்கள் இங்கு கொல்லப்பட்டது .

மேலும் இந்த மலை கொரில்லாக்கள் எப்பொழுதுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும், எப்படியெனில் இக்கொரில்லா குட்டிகள் செல்லப்பிராணிகளுக்காக விற்கப்படுகின்றன. அதுவும் கள்ளச் சந்தையில் பல உயர்வான விலைகளில் சில சமயங்களில் இவை இறைச்சிக்காகவும் கொல்லப்படுகின்றது. 

இக்குட்டிகள் தங்களால் வளர்கப்படும் மனிதர்களைப்போலவே சேட்டைகளை செய்கிறது காரணம் குழந்தையிலிருந்து இவர்களால் இக்குட்டி கொரில்லாக்கள் பராமரித்து வளர்க்கப்படுவதால் அக்குட்டிகள் இம்மனித இனத்தை தங்களின் பெற்றோர் என்று எண்ணிக்கொண்டுள்ளது.

இப்போது காங்கோ பகுதியிலுள்ள அவ்விடத்தில் சுமார் 1000 அறியவகை இனமே எஞ்சுயுள்ளது.

இந்த படத்தில் உள்ள கொரில்லா குட்டிகளின் தாய், ஆயுதமேந்திய நபர்களால் கொள்ளப்பட்டது. பிறகு கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, விருங்கா தேசியப் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் இதேபோன்ற தாக்குதலில் 12 கொரில்லாக்கள் கொல்லப்பட்டது.  

விருங்கா மலை கொரில்லாக்கள் அங்குள்ள மக்கள் தொகையில் அவை பாதி மேலும் அவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. 

படங்கள் :- விருங்கா தேசிய பூங்காவிலிருந்து எடுக்கப்பட்டவை.