காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே பெயரில் பள்ளி தொடக்கம்!

திங்கள் சனவரி 11, 2021

இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே பெயரில் குவாலியரில் புதிய கல்வி மையத்தை இந்து மகாசபா தொடங்கியுள்ளது.

1947- ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னால் காங்கிரஸ் துணை நின்றதை நாம் மறந்துவிடமுடியாது. என்றும் வரும் தலைமுறையினருக்கு இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாறை அறியும்படி செய்யவேண்டும் என்றும் 

மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த கோட்சேவின் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் கல்விமையம் ஒன்றைத் தொடங்கியுள்ள இந்து மகாசபா அமைப்பு.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் நாதுராம் கோட்சே பெயரில் நூலகத்தை உள்ளடக்கிய கல்வி நிறுவனம் ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.

அதன் பெயர் "நாதுராம் கோட்சே ஞானசாலை"- என்பதுதான்.இது தொடர்பாக இந்து மகாசபா தேசியத் துணைத் தலைவராக உள்ள "ஜெய்வீர் பரத்வாஜ் "- கூறும்போது, “இந்தியப் பிரிவினை குறித்து இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் விழிப்புணர்வை பரப்புதல் இந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கமாகும். இதில் மஹாராணா பிரதாப் போன்றவர்களின் வரலாறு இடம்பெறவுள்ளது.

அவ்வகையில் நாதுராம் கோட்சே ஞானசாலை என்ற கல்வி மையம் மூலம் இந்தியப் பிரிவினையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இளம் தலைமுறையினருக்குத் பரப்புவோம் என்றும் அதற்கான நூலகமாகவும் இம் மையம் விளங்கும்.

மேலும் இங்கு பயிற்றுவிக்கப்படும் கல்வியில் குரு கோபிந்த் சிங். சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மஹாராணா பிரதாப், மற்றும் இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ் போன்ற தேசியத் தலைவர்கள் பற்றிய தகவல்களைப் பரப்பப்படும்” என்று கூறியுள்ளனர்.