கார்களின் பாகங்களை பதப்படுத்தப்பட்ட மரத்தால் ஆன பொருளால் தயாரிக்கலாம்!

சனி நவம்பர் 09, 2019

ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில், கார்களின் பாகங்களை, பதப்படுத்தப்பட்ட மரத்தால் ஆன பொருளால் தயாரிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே, மரச் சில்லுகளை வேதியியல் முறையில் சிதைத்து, செல்லுலோஸ் நுண் இழைகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.

இதே தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடினமான, எடை குறைவான செல்லுலோஸ் நுண் பொருளை வைத்து,கியோட்டோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள், காரின் வெளிப் பகுதி மற்றும் உள் அமைப்புகளை வடிவமைத்து,“நேனோ செல்லுலோஸ் வாகனத்தை உருவாக்கி சோதித்து வருகின்றனர்.

காருக்கு உலோகத்திற்கு பதிலாக, செல்லுலோஸ் நுண் இழை பாகங்களை பயன்படுத்தும்போது,காரின் மொத்த எடையில், 10 சதவீதம் குறைகிறது.

எடை குறைவான செல்லுலோஸ் வாகனம், அதன் வாழ்நாளில் உமிழும் கார்பனில்,2,000 கிலோ குறையும். சில ஆண்டுகளில்,செல்லுலோஸ் வாகனங்களை எதிர்பார்க்கலாமா?