காரணத்தை வெளியிட்டார் ஹிஸ்புல்லாஹ்!

திங்கள் அக்டோபர் 14, 2019

நான் யாரு­டைய முக­வ­ரா­கவும் இந்த தேர்­தலில் போட்­டி­யிடவில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் முக­வ­ராக மாத்­தி­ரம்தான் போட்­டி­யி­டு­கின்றேன் என ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளு­ந­ரு­மான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

 காத்­தான்­கு­டியில் தனது முத­லா­வது பிர­சாரக் கூட்­டத்தை கடந்த வெள்ளிக்­கி­ழமை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

காத்­தான்­குடி நகரசபை தவி­சாளர் எஸ்.எச்.அஸ்பர் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் தொடர்ந்­தும் உ­ரை­யாற்­றிய அவர், இன்று எந்த நேரமும் எனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. நான் படு­கொலை செய்­யப்­பட்டால் தேர்தல் சட்­டத்தின் படி உட­ன­டி­யாக இன்­னொரு வேட்­பா­ளரை நிறுத்தி இந்­தப்­ பு­னித போராட்­டத்தை நாங்கள் கொண்டு செல்ல முடியும்.

நான் எந்த நேரமும் மர­ணிக்­கப்­ப­டலாம்.எந்த நேரமும் படு­கொலை செய்­யப்­படலாம். என்னை படு­கொலை செய்­வ­தற்­காக சர்­வ­தேச சக்­திகள்  பின் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் சமு­தாயம் சிந்­திக்க வேண்டும்.அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் உட்­பட முஸ்லிம் அமைச்­சர்­களே உங்­க­ளு­டைய இத­யத்தின் மீது கையை வைத்து சிந்­தி­யுங்கள்.

நாங்கள் முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்ற இந்த தேர்­த­லுக்­குப்­ பின்னால் வரப் போகின்ற காலம் எவ்­வா­றான பயங்­க­ர­மான காலம். சகல சட்­டங்­க­ளையும் சகல அதி­கா­ரங்­க­ளையும் பறிக்கச் செய்து வெறு­மனே அடி­மைச்­ச­மூ­க­மாக மாற்ற வேண்­டு­மென்று திட்­ட­மி­டு­கின்ற அத்­தனை எதி­ரி­களும் இரண்டு முகாம்­க­ளிலும் இருக்­கின்­றார்கள்.

வெறும் ஒரு அமைச்­ச­ராக நானும் நீங்­களும் இருந்து ஆமா சாமி போட முடி­யுமே தவிர வேறு எதையும் செய்ய முடி­யாது. கடந்த ஐந்து ஆண்­டுகள் ஆமா சாமி போட்டு முஸ்லிம் சமு­தா­யத்தை இன்று வீதிக்கு கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கின்றோம். இவ்­வா­றான ஆமா சாமி போடு­கின்ற சமு­தா­ய­மாக நாம் இருக்க முடி­யுமே தவிர இந்த சமு­தா­யத்­துக்­காக பேசு­கின்ற இந்த சமு­தா­யத்­துக்கு வரு­கின்ற தடை­களை உடைத்­தெ­றி­கின்ற தகர்க்­கின்ற ஒரு சக்­தி­யாக நாங்கள் இருக்க முடி­யாது.

என்னை பொறுத்­த­வரை நான் 2000ஆம் ஆண்டே உயி­ரி­ழந்து விட்டேன். அதன் பின்­ன­ரான ஒவ்­வொரு நாட்­களும் எனக்கு போனஸ் போன்­ற­துதான். நான் யாருக்கும் அஞ்­சு­ப­வ­னு­மில்லை, அஞ்­சு­வ­து­மில்லை. அஞ்­சப்­போ­வ­து­மில்லை.

எனது பல்­கலைக்கழ­கத்தை அல்லாஹ் பாது­காப்பான். அதனை பாது­காக்க இங்கு நான் போட்­டி­யி­ட­வில்லை.

முஸ்லிம் சமூ­கத்தை பாது­காக்­கவே நான் போட்­டி­யி­டு­கி­றேன். இன்னும் 25 ஆண்­டு­க­ளுக்கு முஸ்­லிம்கள் இந்த நாட்டில் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும், அதற்­கான நிரலை நான் தயா­ரித்­துள்ளேன்.

இந்த முஸ்லிம் அர­சியல் தலை­மை­களில் மிக மூத்­தவன் நான் தான். நான் யாரு­டைய முக­வரும் அல்ல. நான் முஸ்­லிம்­களின் முகவர் மாத்­தி­ர­மே­யாகும். ஜனா­தி­ப­தி­யாகும் எண்ணம் ஒன்றும் எனக்­கில்லை அந்­த­ள­வுக்கு நான் முட்டாள் இல்லை.

எனவே தான் முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வெற்றி பெறும் ஜனாதிபதி வேட்பாளருக்கே நாம் ஆதரவு வழங்குவோம்.

நான் ஜனாதிபதியாகும் வேட்பாளர் இல்லை. வெற்றி பெறும் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என மேலும் தெரிவித்தார்.