கார்த்தி படத்தில் ஜோதிகா!

வெள்ளி மார்ச் 08, 2019

லோகேஷ் கனகராஜ், பாக்யராஜ் கண்ணன் படங்களை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஜித்து ஜோசப். அவர் அடுத்ததாக கார்த்தியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது படத்தின் கதையை ஜித்து ஜோசப் எழுதி முடித்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் கார்த்தியின் அண்ணியும், நடிகையுமான ஜோதிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் கார்த்தி மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள். இது ஜித்து ஜோசப்பின் வழக்கமான படம் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கார்த்தி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.