கார்த்திகை பூவே!
ஞாயிறு நவம்பர் 24, 2019
பூமியில் பூக்கும்
பூஎல்லாம்
பூசைக்கு
சென்றதும் உண்டு
மலர் வளையங்களில்
இடம் கொண்டதும்
உண்டு
ஆனால்
கார்த்திகை பூவே
நீ எம் அரியணையில்
தேசிய மலராக
இடம்பிடித்து
விட்டாய்
உன் நிறங்கள்
எங்களை
எழுச்சி கொள்ள
தோணும்
தேசியதலைவன்
தன் அணிசேரும்
வீரர்களுக்கு
இயற்பெயர் மாற்றி
செயற்பெயர் வைப்பார்
கார்த்திகை பூவே
உன்இயற்கை
பெயர் செந்தாழை பூ
நீயே பெயர் மாற்றி
வந்தாய்
எமது தலைவன்
உன்னை
கொண்டாடினான்
இருவருமே
கார்த்திகை
மாதத்துக்கு
உரியவர்களே
றொப்