கார்த்தியுடன் இணைந்த சூர்யா!

திங்கள் பெப்ரவரி 11, 2019

கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவ்’ படத்துடன் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் இணைந்துள்ளது. 

`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

 

 

இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ டீசர் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா நாயகனாகவும் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.