காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து - அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு!

செவ்வாய் ஓகஸ்ட் 06, 2019

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார்.

‘அரசின் இந்த முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இது காஷ்மீரின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறோம்’ என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.