காடழிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!!

திங்கள் அக்டோபர் 19, 2020

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்குச் சொந்தமான குடும்பிமலை ஒதுக்குக்காடு மற்றும் கதிரவெளி காட்டு பகுதிகளில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர்,நேற்று (18) மாலை கைதுசெய்யப்பட்டனர் என, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

குடும்பிமலை ஒதுக்குக்காடு பகுதியில்,வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வன திணைக்களத்துக்குரிய எல்லைக் கல்லை அகற்றி, காடழிப்பில் ஈடுபட்ட நிலையிலேயே, சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதன்போது வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் சுங்கான்கேணி மற்றும் சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.