காட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019

கதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காட்டுத்துப்பாக்கி ஒன்றினால் சுட்டு குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலம் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம், வெடிஹிட்டிகந்த பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.