காவற்துறை மீது கத்தித் தாக்குதல்-பிரான்ஸ்

ஞாயிறு மே 24, 2020

காவல் நிலையத்தின் அருகாமையில்,தவறாகத் தரித்து நின்ற ஒரு சிற்றுந்து,காவற்துறையினரால் சக்கரம் முடக்கப்பட்டு இருந்தது.இன்று 10 மணியளவில் அந்தச் சிற்றுந்தின் மீது ஒரு நபர் ஏறி இருந்த நிலையில் அவரை இறங்குமாறு காவற்துறை அதிகாரி பணித்துள்ளார்.

காவற்துறையின் கட்டளைக்கு மறுத்து,காவற்துறையினரைத் தாக்க முயன்ற போது,அவர்கள் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடாத்தியுள்னர்.

அதனையும் தாண்டி,அந்தக் காவற்துறை அதிகாரி மீது சரமாரியான தாக்குதல் நடாத்தி,முகத்தில் பலமான குத்துக்களை விட்டுள்ளார்.

அதிலிருந்து தப்பியோட முயன்ற இவரைக் காவற்துறையினர் மடக்கிய போது அவர்களைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். அதனையும் தாண்டி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை அதிகாரி மீது ஆயுதத் தாக்குதல் நடாத்திய குற்றத்தின்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளார்.சில வருடங்கள் முன்பு,இதே காவல் நிலையத்தில்,பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தி ஒரு காவற்துறை வீரன் கொல்லப்பட்டு, பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.