கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்!

வெள்ளி மார்ச் 15, 2019

வரலாற்று சிறப்பு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. 

இம்முறையும் இலங்கையையிலிருந்து  ஏழாயிரம் பக்தர்களும் இந்தியாவிலிருந்து  இரண்டாயிரத்து  நானூறு   பக்தர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. இன்றைய  தினம் மாலை 5மணிக்கு கச்சதீவு அந்தோனியார் ஆலயம் முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமாகின்றது. நாளை சனிக்கிழமை காலை யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருப்பலியுடன்  சிறப்புத் திருப்பலி பூஜைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெறுவதுடன் திருப்பலி பூஜைகளின் பின்னர் தேர் பவனியும், அதனை தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்று திருவிழா நிறைவடையவுள்ளது.   இம்முறையில் இலங்கை இந்திய பக்தர்களின் ஒன்றுகூடலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இன்றும் நாளையும் இடம்பெற்றும் இந்த  பெருவிழா நடைபெறவுள்ளதால், இந்திய – இலங்கை பக்தர்கள் கலந்துகொள்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது.