கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

ஞாயிறு நவம்பர் 22, 2020

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை வயல் வெளியில் அமைந்துள்ள பற்றைக்காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்று (21) முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.