கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர் கைது!

வியாழன் செப்டம்பர் 12, 2019

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று (11) இரவு தென்மராட்சி கொடிகாமத்தில் இடம்பெறவுள்ளது.

கொடிகாமம், எருவன் பகுதியில் உள்ள வீடொன்றில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டார்.