கொரோனாவை சமூகத்துக்கு மத்தியில் பரவாமல் தடுக்க நடவடிக்கை

சனி ஜூலை 11, 2020

 கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் சமூகத்துக்கு மத்தியில் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

 இந்நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பரவி வரும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி வருவதாகத் தொற்று நோய் ஆய்வு பிரிவின் வைத்திய நிபுணர் தீபா கமகே தெரிவித்தார். 
 
 குறித்த மத்திய நிலையத்துக்குச் சேவைகளை மேற்கொண்டுவரும் சிலர் வெளிப்பிரதேசங் களுக்கு சென்றிருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு வேறுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்தார். 

 இவ்வாறு கந்தகாடு முகாமில் சேவை விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை வேறுபடுத்தும் நடவடிக்கை கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 

 குறித்த சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையைச் சுகாதார மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிரகாரமே புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்த அதிகாரி ஒருவர், மாரவில பிரதேசத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தீபா கமகே தெரிவித்தார்