கேள்வி கேட்ட தடகள வீரருக்கு மரண தண்டனை?

புதன் நவம்பர் 11, 2020

ஈரானில் கொரோனா வைரஸ் பரவலின் போது ஜிம்கள் மூடப்பட்டிருக்கும் போது வழிபாட்டு தலங்கள் திறந்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஊனமுற்ற தடகள வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011 நியூசிலாந்து பாரா ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஈரான் பாடிபில்டர் ரேஸா தப்ரிஸி.

இவர் இன்ஸ்டாகிராமில்,புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜிம்களை மூடுவது வேடிக்கையானது என்று கூறி இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட குற்றதிற்காக ஈரான் போலீசார் ரேஸா தப்ரிஸியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டதை அடுத்து தனது கருத்தால் ஏற்பட்ட சர்ச்சைக்கு ரேஸா தப்ரிஸி மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ரேஸா தப்ரிஸிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.