கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

புதன் பெப்ரவரி 20, 2019

சிறீலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

rup[n

 தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்.அவர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “நீலப்புலிகள்” என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.