கே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.

வெள்ளி ஏப்ரல் 19, 2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் சொம்பிகளின் கனவுலக சாம்ராஜ்ஜியத்தை இயக்கி வரும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தொடர்ந்தும் கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் என்ற சிங்களக் கைக்கூலியின் வழிநடத்தலில் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் நிழற்பட ஆதாரம் சங்கதி-24 இணையத்திற்கு கிடைத்துள்ளது.

 

விசுவநாதன் உருத்திரகுமாரனைத் தலைவராகக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக சாம்ராஜ்ஜியத்திற்கான செயற்பாட்டுக் குழுவை 15.06.2009 அன்று உருவாக்கி விட்டுக் கடத்தல் நாடகமாடிக் கடந்த 05.08.2009 அன்று சிங்களத்தின் கைப்பாவையாக கே.பி மாறினார்.

KP-Rudra

 

இதன் பின்னர் ஏறத்தாள ஓராண்டு கழித்து த ஐலண்டன் எனப்படும் ஆங்கில மொழியிலான சிங்களப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான சமிந்திர பேடினான்டோ என்பவருக்கு கே.பி செவ்வி வழங்குகையில், தனது வெளிநாட்டு வலையமைப்புக்களை தனது சார்பில் பிரான்சில் வசிக்கும் மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன் அவர்களே வெளிநாட்டில் இருந்து இயக்கி வருகின்றார் என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருந்தார்.

 

இதனை 30.07.2010 வெளிவந்த கே.பியின் செவ்வியில் த ஐலண்டன் பத்திரிகை பதிவு செய்திருந்தது.

KP-Mano

 

இந்நிலையில் மனோ என்ற குறித்த நபருடன் உருத்திரகுமாரனின் கனவுலக ஊடக அமைச்சரான சுதன்ராஜ் என்பவரும், உருத்திரகுமாரனின் அமைச்சர்கள் என்று கூறிக் கொள்ளும் வேறு சிலரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பதாகையின் கீழ் எடுத்த நிழற்படம் சங்கதி-24 இணையத்தின் கைகளில் சிக்கியுள்ளது.

 

இதன் மூலம் கே.பியால் இயக்கப்படும் சிங்களத்தின் கைக்கூலி அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படும் சொம்பி கனவுலக சாம்ராஜ்ஜியம் செயற்படுவது உறுதியாகியுள்ளது.

 

தமிழ் மக்களின் உடலில் சிங்கள இரத்தம் ஓடுகின்றது என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்றும் மிகவும் கீழ்த்தரமான போலிப் பரப்புரைகளைக் கடந்த காலத்தில் மேற்கொண்ட ஐ.பி.சி எனப்படும் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ்ப்பாணத்தைத் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனத்தின் பிரான்ஸ் செய்தியாளராக உருத்திரகுமாரனின் கனவுலக ஊடக அமைச்சர் சுதன்ராஜ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.