கேரளா மலபார் எக்ஸ்பிரஸ் இரயிலின் சரக்கு பெட்டியில் தீ விபத்து! உயிர் தப்பிய பயணிகள்-

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா அருகே சென்று கொண்டு இருந்த மலபார் எக்ஸ்பிரஸ் இரயிலின் சரக்கு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
காலை 7.47 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மலபார் எக்ஸ்பிரஸ் இரயிலின் சரக்கு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் தீ பிடித்து எரிந்த சரக்கு பெட்டி கழற்றி விடப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சரக்கு பெட்டியில் தீ பிடித்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் இந்த உடனடி நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று இரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.