கெஸ்பேவ நகர சபையின் 8 ஊழியர்களுக்கு கொரோனா

சனி மார்ச் 06, 2021

கெஸ்பேவ நகர சபையின் 8 ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நகர சபையின் பொதுச் சேவைகளை இன்று (05) தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் 159 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி செலுத்துதலை இணைத்தின் மூலம் மேற்கொள்ள முடியும் என கெஸ்பேவ நகர சபையின் தலைவர் லக்ஷமன் பெரேரா தெரிவித்தார்.