கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

வியாழன் நவம்பர் 14, 2019

கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய 1.950 கிலோ கிராம் கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ் வடமராட்சி கிழக்கு கோவில் பகுதியில் இருந்து வெளிமாவட்டத்திற்கு கஞ்சாவினை கடத்த முற்பட்ட போதே குறித்த இளைஞன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், 

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் கட்டைக்காடு கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் குறித்த இளைஞனிடம் இருந்து 1950 கிலோக்கிராம் கஞ்சா கைப்பற்றப் பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞன் பளை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையைப் பளை காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.