கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் மரணம்

வியாழன் அக்டோபர் 29, 2020

கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதனை அடுத்து சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.