கிராம உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வியாழன் செப்டம்பர் 24, 2020

கிராம உத்தியோகத்தர்களின் வேலை நேரம் தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஓய்வு தினம் தவிர ஏனைய 6 நாட்கள் 24 மணிநேரமும் கிராம உத்தியோகத்தர்கள் தமது பிரிவிற்கு சேவையாற்ற கடமைப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2020.10.01 திகதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

அத்துடன் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 முதல் 4.15 வரையிலும், சனிக்கிழமை 12.30 வரையிலும் மக்கள் சேவைக்காக தங்களது அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.