கலைஞர்களுக்கு ரூ.5,000 வழங்க நடவடிக்கை!

புதன் செப்டம்பர் 11, 2019

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, 200 பேருக்கு இந்தக் கொடுப்பனவை வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

நாட்டிலுள்ள கலைஞர்களுக்காக, அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, 94 மில்லியன் ரூபாய் வட்டித் தொகையில் இந்தக் கொடுப்பனவை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.